புதுச்சேரியில் மீண்டும் ஒரு விபச்சாரக் கும்பல் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் ஒரு விபச்சாரக் கும்பல், போலீசாரின் வலையில் மாட்டியுள்ளது.அதில் சம்பந்தப்பட்டவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுச்சேரியில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.அதில் வெளியான பல திடுக்கிடும் செய்திகளால், அவ்வழக்கு பாலியல் வன்முறை வழக்காக மாற்றப்பட்டது.
மேலும், அக்கும்பல் சிறுமிகளை வைத்து விபச்சாரம் நடத்தியதும், பல அரசியல் பிரமுகர்கள் அவ்வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அவ்வழக்கின் பரபரப்பு முழுதாக அடங்குவதற்குள் புதுச்சேரி போலீசாரிடம் மீண்டும் ஒரு கும்பல் சிக்கியுள்ளது.
புதுவை அருகே தமிழக பகுதியில் மொரட்டாண்டியில் சனீஸ்வரன் கோவில் அருகே ஒரு சொகுசு பங்களாவில் விபசாரம் நடப்பதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டக் குப்பம் கூடுதல் துணை காவல் ஆணையர் நிஷா சேகர் தலைமையில் ஆரோவில் போலீசார் நேற்று இரவு அந்த சொகுசு பங்களாவை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.
அப்போது அந்த சொகுசு பங்களாவில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 8 பேரை மடக்கி பிடித்தனர்.அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், புதுவை மேட்டுப்பாளையம் பாலஜி, கோவிந்தசாலை சேகர், முதலியார்பேட்டை குமரன். இவர்கள் 3 பேரும் விபசாரம் நடத்தியவர்கள் ஆவர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஈரோடு பள்ளிப்பாளையத்தை சேர்ந்த கவுசல்யா, பெங்களூரை சேர்ந்த ஜான்பீன் ஆகிய 2 பெண்களும், வாடிக்கையாளர்களாக வந்த பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த வெற்றி, பூபாலன் மற்றும் சண்முகாபுரம் வி.பி.சிங் நகரை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் அடங்குவர்.
மேலும், அங்கிருந்த ஆபாச பட சி.டி.க்கள் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications