மதன் முகத்தில் காயங்கள்... போலீசார் 'கவனிப்பு'?
சென்னை: நேற்று கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் வேந்தர் மூவீஸ் மதனின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன. போலீசார் அவரை அடித்திருப்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
எஸ்.ஆர். எம். மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் வாங்கித் தருவதாக கூறி 84 கோடி ரூபாயை மாணவர்களிடம் மோசடி செய்ததாக மதன் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. புகார் வெளியாவதற்குள் சத்தமின்றி தலைமறைவாகிவிட்டார் மதன். கிட்டத்த 6 மாதங்களுக்கு மேல் போலீசுக்கு 'தண்ணி' காட்டிவிட்டார்.

அவரை இந்தியா முழுவதும் போலீசார் தேடியலைந்தனர். ஒருவழியாக நேற்று கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், மதனை சில தினங்களுக்கு முன்பே போலீசார் பிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரைக் 'கவனிக்க வேண்டிய விதத்தில்' கவனித்து விஷயங்களைக் கறந்த பிறகுதான் வெளியில் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கவனிப்புக்கு அடையாளமாக மதனின் முகத்தில் இடது பக்கத்தில் காயங்கள் தெரிகின்றன.
நேற்று மாலை நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டபோது, இந்த காயங்கள் குறித்து மதனிடம் நீதிபதி கேள்வி கேட்டார். இந்த காயம் எப்படி ஏற்பட்டது? உடலில் வேறு காயங்கள் உள்ளனவா? என்று கேட்டபோது, அப்படியெல்லாம் ஏதுமில்லை என்று கூறிவிட்டார் மதன்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications