போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி.. இளைஞர் மண்டை உடைப்பு
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோவையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவரின் மண்டை உடைந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி செய்து கலைத்தனர். இதனைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை போலீசார் மீண்டும் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, மதுரையில் நடைபெற்றது போன்றே கோவையிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் மீது இன்று போலீசார் தடியடி நடத்தியும் குண்டுக்கட்டாக தூக்கியும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள், மாணவர்கள், இளைஞர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தை நிறுத்தி விட்டு கலைந்து போகும் படி போலீசார் பேச்சவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையை மாணவர்கள் ஏற்க மறுத்தனர்.
இதனையடுத்து, பெண்கள், மாணவிகள் என்றும் பாராமல் போலீசார் அவர்களை ஓட ஓட அடித்தனர். மேலும், கடைகளில் பதுங்கி இருந்த பெண்களைக் கூட வெளியே இழுத்து வந்து போலீசார் அடித்து உதைத்தனர்.
மேலும், இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை போலீசார் நடத்தினர். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் தாக்குதலில் அந்தோணி செல்வம் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் பலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications