பிரியாணியில் முடி.. தகராறு செய்த வாடிக்கையாளர்கள்.. விசாரிக்க வந்த ஏட்டு மண்டை உடைந்தது
சென்னை: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரியாணியில் முடி கிடந்ததைத் தட்டிக் கேட்டதால், சாப்பிடச் சென்றவர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே மோதல் உண்டானது. இது தொடர்பான விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜி, தாமஸ், ஷேவியர், சுரேந்தர் என்ற 4 பேர் வேளாங்கண்ணி செல்வதற்காக நேற்றிரவு சென்னை வந்தனர். அங்கிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் மூலம் அவர்கள் வேளாங்கண்ணி செல்லத் திட்டமிட்டனர்.

அப்போது இரவு சாப்பாட்டிற்காக எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பிரியாணியில் முடி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், ஹோட்டல் ஊழியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் முற்றி மோதலானது.
இது குறித்து தகவல் அறிந்து, விசாரணைக்காக ஆல்பன் என்ற போலீஸ்காரர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தகராறில் ஈடுபட்டவர்களை அவர் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து ஆல்பனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், அவரது மண்டை உடைந்தது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதை தொடர்ந்து எழும்பூர் போலீசார் விரைந்து சென்று, போலீஸ்காரரை தாக்கிய ராஜி, தாமஸ், ஷேவியர், சுரேந்தர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications