திருட்டு பைக்கில் வந்து காரைத் திருடிய பலே திருடன்... துரத்திப் பிடித்த ஏஎஸ்பி!
நெல்லை: குற்றாலத்தில் காரை திருடி விட்டு தப்பி ஓடிய வாலிபரை ஏஎஸ்பி அரவிந்தன் தலைமையிலான போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள ரமையன்துறையைச் சேர்ந்தவர் அந்தோணி பீட்டர் அலெக்சண்டர். இவர் தற்போது சென்னை அயன்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து தெ்ன்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரசில் வந்து இறங்கினார். பின்னர், ரயில் நிலையத்தில் நிறு்த்தப்பட்டிருந்த ஒருவரின் பைக்கை கள்ளச் சாவி போட்டு திறந்து குற்றாலத்திற்கு கடத்தி சென்றார்.

பழைய குற்றாலம் பகுதிக்கு பைக்கை ஓடடி சென்ற அந்தோணி அங்கு சாலை ஓரத்தில நுங்கு விற்கும் கடை அருகே பைக்கை நிறுத்தினார். அங்கு கேரளா மாநிலம் கொட்டாக்கரையை சேர்ந்த அனிஸ் என்பவர் தனது நண்பர்களுடன் காரை நிறுத்தி விட்டு நுங்கு சாப்பிட்டு கொண்டிருந்தார். அந்த காரில் சாவி இருப்பதை பார்த்த அந்தோணி அந்த காருககுள் யாருக்கும் தெரியாமல் நைசாக ஏறி காரை கடத்தி சென்றார்.
நிறுத்தியிருந்த காரை காணாமல் திகைத்த அனிஸ் உடனடியாக இது குறித்து குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வயர்லெஸ் மைக்கில் காரின் பதிவு எண்ணை அனைத்து போலீஸ் நிலையத்துககு தெரிவித்து தேடினர்.
இதற்கிடையே நெல்லை சென்று விட்டு ஜூப்பில் தென்காசி திரும்பிக் கொண்டிருந்த ஏஎஸ்பி அரவிந்தன் வயர்லெஸ்சில் கூறப்பட்ட பதிவு எண் கொண்ட கார் எதிரை நெல்லைக்கு வருவதை பார்த்தார். இதையடுத்து ஜூப்பை திரும்பிய அவர் காரை காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றார்.
மேலும் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் அலார்ட் செய்தார். போலீசார் துரத்துவதை பார்த்த அந்தோணி காரை ஆலங்குளம் அருகே மலை ராமர் கோவில் பக்கத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். ஏஎஸ்பி அரவிந்தன் தலைமையிலான போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி காரை மீட்டனர். மேலும் அங்கு ஓர்க்ஷாப் அருகே பதுங்கியிருநத அந்தோணியையும மடக்கி பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அந்தோணியை பாவூர்சத்திரம் காவல் நிலையததில் வைத்து விசாரித்து விட்டு அவரை குற்றாலம்காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
சினிமா பாணியில் கடத்தப்பட்ட காரை சில மணி நேரத்திலேயே போலீசார் மீட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications