Dharmapuri murder: கஞ்சா போதையில் தாயை கொன்றாரா தருமபுரி தேவராஜ்? போலீஸார் பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஜாமீனில் எடுத்த தாயை கொன்ற மகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பழைய இண்டூர் பகுதியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தேவராஜ், தனது தாயை கொன்றது ஏன் என்பது குறித்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா(42). இவரது மகன் தேவராஜ் (19). கூலி வேலை செய்து வரும் இவர், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த தனது தாய் சின்னபாப்பாவை, கத்தியால் சரமாரியாகக் குத்தி, கொலை செய்துள்ளார்.

Dharmapuri crime

இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, தாயைக் கொலை செய்த தேவராஜைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் காவலரின் தொப்பி அணிந்து கஞ்சா போதையில் பஸ் நிலையத்தில் அட்ராசிட்டி செய்தாராம்.

இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் நேற்று முன் தினம் ரூ 40 ஆயிரம் செலவு செய்து ஜாமீனில் அவரது தாய் வெளியே எடுத்தார். இந்த நிலையில் தாய், மகனுக்கு புத்திமதி சொன்னதால் ஆத்திரமடைந்து தாயை இரும்பு ராடால் அடித்து கொன்றுவிட்டார்.

தாயின் அலறல் சப்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் உள்பக்கம் பூட்டியிருந்த கதவை தட்டினர். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதனால் சாவி போடும் இடத்தில் இருந்த ஓட்டையில் பார்த்த போது தேவராஜ் கையில் இரும்பு ராடில் ரத்தம் இருந்ததை அடுத்து போலீஸுக்கு போன் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை தட்டி வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் தேவராஜ் வர மறுத்தார். பிறகு "நீயாக வந்துவிட்டால் நாங்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்" என சொன்னதும் தேவராஜ் கதவை திறந்து வெளியே வந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது தாய் சின்னபாப்பா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இந்த நிலையில் கஞ்சா போதையில் இந்த கொலை நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அதை போலீஸார் மறுத்தனர்.

அவர்கள் விடுத்த அறிக்கையில் "குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ், தன்னை எதிர்த்து யாரும் பேசக் கூடாது என்ற ஆத்திரத்தில் தனது தாயை கொலை செய்தார். கஞ்சா போதையில் கொலை செய்யவில்லை" என தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+