வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பியதாக தூத்துக்குடி பாதிரியார் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாட்ஸ் அப்பில் ஆபாச படத்தை வெளியிட்டதாக கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ பாதிரியாரான டேவிட் ஞானய்யா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி, சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் இணைந்து அமைத்துள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச படம் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்கள் டேவிட்டை எச்சரித்துள்ளனர். அதோடு இது தொடர்பாக சிஎஸ்ஐ அமைப்பின் செயல்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிச்சந்திரனின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாதிரியார் டேவிட் அந்த ஆபாச வீடியோவை அனுப்பியது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications