பர்கூர்: எருதுவிடும் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் -கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி
பர்கூர்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்து தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் வட தமிழகமாக வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, மாநிலத்திலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது காளை முட்டியதில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
எருதுவிடும் விழாவை காண தமிழகம் உட்பட கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலிருந்து சுமார் 20 ஆயிரம் பேர் குவிந்தனர். இதனால் திரும்பும் திசையெல்லாம் மனித தலைகளாக தெரிந்தன. பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. ஓடிய காளை வழியில்லாமல் பொதுமக்கள் கூட்டத்தில் நுழைந்தது. இதில் காளை முட்டியதில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
போலீசார் தடியடி
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தடியடிக்கு பயந்து நான்கு புறங்களிலும் பொது மக்கள் ஓடினர். இதனால் எருதுவிடும் விழா சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications