மருது சகோதரர்கள் 216வது குரு பூஜை விழா: ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி
மதுரை: மருது சகோதரர்கள் 216வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்ற விழாவில் போலீசாரின் தடுப்புகளை மீறி சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் 216வது நினைவு தினம், அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் திரு. ஓ. எஸ். மணியன், திரு. ஜி. பாஸ்கரன் ஆகியோர், மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை புறநகர் மாவட்டக் கழகம் சார்பில், அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சகோதரர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் போஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மீனாட்சி பஜார் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு, எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குரு பூஜை விழாவில் பங்கேற்ற சிலர் போலீசாரின் தடுப்புகளை மீறி சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இரண்டு பேருக்கு மண்டை உடைந்தது. குரு பூஜை விழாவில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications