விஜயகாந்த் கைது.. தேமுதிகவினர் கொந்தளிப்பு.. பஸ் மறியல்.. போலீஸ் தடியடி
சென்னை: அனுமதியின்றி மனிதசங்கிலி போராட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேமுதிகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரியும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் கோயம்பேடு முதல் கோட்டை வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார் விஜயகாந்த். ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
எனினும் அனுமதியின்றியே விஜயகாந்த் தலைமையில் ஏராளமானோர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரிசையாக நின்ற சிலநிமிடங்களிலேயே போலீசார் விஜயகாந்தையும், தேமுதிக தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர். பேருந்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர். அப்போது ஈகா தியேட்டர் அருகே மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிகவினர் விஜயகாந்தை அழைத்துச்சென்ற பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு குவிந்திருந்த போலீசார் தேமுதிகவினர் மீது தடியடி நடத்தினர்.
இதேபோல கோயம்பேடு அருகே நின்று கொண்டிருந்த தேமுதிகவினரும் திடீரென மறியல் செய்ய முயன்றதால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். விஜய்காந்த் கைது செய்யப்பட்டு ஏற்றப்பட்ட பேருந்தை மறித்து மறியல் நடத்தியதால் போலீஸ் தடியடி நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விஜயகாந்த் சென்ற பேருந்து முன்பும் பின்பும் நூற்றுக்கணக்கான போலீசார் பேரணியாக சென்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications