பஸ் ஸ்டிரைக் எதிரொலி.. சென்னையில் போலீசார் விடுமுறை ரத்து
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுட்டுள்ளதால் சென்னையில் விடுமுறையில் உள்ள போலீசாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விடுமுறையில் உள்ள போலீசாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்குதல், 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே15 ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து நாளை முதல் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்தனர். ஆனால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இன்றே நிறுத்தப்பட்டுள்ளன. அரசு கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் ஒரு நாள் முன்னதாகவே வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள போலீசாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு, பல்லவன் பணிமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிமனைகளிலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications