மணல் திருடிய போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது
நெல்லை: நெல்லை, பேட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மறறும் போலீசார் திருப்பணிகரிசல்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெப்போ மற்றும் டிராக்கரையும், மற்றும் அந்த வாகனங்களுக்கு முன்பாக வந்த பைக்கையும் மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது டிராக்டரில் இருந்து ஒருவர் தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கரன்திரடு பகுதியிலிருந்து ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து வாகனங்களை ஓட்டி வந்த 2 பேர் மற்றும் பைக் ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மகேஷ், மாரிக்குமார், சிஎன் கிராமத்தை சேர்ந்த கணேஷபூபதி, மாரியப்பன் என்பது தெரிய வந்தது.
இதில் கணேசபூபதி நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜாராஜன் அதிரப்படையில் காவலராக பணியாற்றி வருவதும் வாகனங்களுக்கு முன் பாதுகாப்புக்காக அவர் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய மாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications