கள்ளக்காதலால் கட்டிய மனைவிக்கு கொலை மிரட்டல்- ஏட்டையா கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கட்டிய மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டு மற்றும் அவரது கள்ளக்காதலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகரிலுள்ள ஜக்கப்பன் நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். இவர் ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் தலமைக்காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 1997 ஆம் ஆண்டு உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான நான்கு மாதத்தில் முருகனின் தாய் குணம்மாள் 25 லட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகையை வரதட்சணையாக வாங்கி வருமாறு உமாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் முருகனுக்கு சென்னைக்கு இடமாறுதல் கிடைத்ததால் கணவருடன் உமாவும் சென்னைக்கு சென்றார். கடந்த நான்கு ஆண்டுக்கு முன் முருகனுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டதால் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு உமாவை கூட்டிக்கொண்டு வந்துள்ளார்.

கிருஷ்ணகிரிக்கு வந்தபிறகு முருகனுக்கும், கனகமூட்லு என்ற பகுதியை சேர்ந்த மகேந்திரன் மனைவி விஜயா என்பவருக்கும் இடையே கள்ளதொடர்பு ஏற்பட்டது. இதை தட்டி கேட்ட உமாவை "உனது குழந்தைகளை அழைத்து கொண்டு ஓடி விடு. இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன்' என முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து உமா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி, ஏட்டு முருகன் மற்றும் அவரது தாயார் குணம்மாள், தங்கை சாந்தி, தம்பி அமரேஷ், ஆனந்த், ஆறுமுகம், விஜயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+