குடும்பத்தோடு மாஞ்சா விற்று வந்த முதியவர், பேரன் கைது... மகன் ஓட்டம்.. வட சென்னையில் மாஞ்சா வேட்டை
சென்னை: வட சென்னைப் பகுதியை அச்சுறுத்தி வரும் மாஞ்சா தடவப்பட்ட நூல்களால் ஒரு சிறுவனின் உயிர் அநியாயமாக பறி போய் விட்டதைத் தொடர்ந்து போலீஸார் மாஞ்சா நூலுக்கு எதிரான வேட்டையில் குதித்துள்ளனர். பண்டல் பண்டலாக வைக்கப்பட்டிருந்த மாஞ்சா தடவிய நூல்களையும், மாஞ்சா தயாரிப்புப் பொருட்களும், ஆயிரக்கணக்கான பட்டங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அஜய் என்ற ஓட்டேரியைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் பைக்கில் பெரம்பூர் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது மாஞ்சா தடவப்பட்ட பட்ட நூல் கழுத்தை அறுத்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வட சென்னையில்தான் இப்படி அபாயகரமான முறையில் பட்டம் விடுவது அதிகம் உள்ளது. இந்த மாஞ்சா பட்டத்தை ஒழிக்க போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸார் வேட்டையில் இறங்கினர். விசாரணையில், அம்பத்தூரை அடுத்த கொரட்டூரை சேர்ந்த குமார் (67) என்பவர்தான் பரம்பரை பரம்பரையாக மாஞ்சா தயாரிக்கத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. ஓட்டேரி பகுதியில் குமரன் ஸ்டோர் என்ற பெயரில் பொடி கடை நடத்தி வருகிறார் இவர்.
மாஞ்சா தயாரிக்க உதவும் கண்ணாடி தூள், வஜ்ஜிரம், கடுக்காய், ஜவ்வரிசி, கிழங்கு மாவு, கலர் பவுடர், ஊமத்தஞ்சாறு ஆகியவற்றை இவர் மொத்தமாக விற்பனை செய்கிறார். குமாருடன் அவரது மகன் முருகன், பேரன் பிரதீப் ஆகியோரும் இணைந்து இதைத் தொழிலாக செய்து வருகின்றனர்.
ஓட்டேரி, பெரம்பூர், மங்களாபுரம், ஏகாங்கிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் காற்றாடி விடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்த கடைக்கு வந்துதான் ஒட்டு மொத்தமாக வாங்கிச்செல்வர். இதையடுத்து செம்பியம் போலீசார் குமார், பிரதீப்பை நேற்று காலை கைது செய்தனர். முருகன் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
இன்னொரு இடத்தில் இன்னொருவர் கைது
இந்த நிலையில் காசிமேடு, விநாயகபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காசிமேடு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஆயிரக்கணக்கான காற்றாடிகள், பண்டல் பண்டலாக மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டின் உரிமையாளர் சேகர் கைது செய்யப்பட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications