கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயத்திற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் குழுவின் தலைவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி, தென் மண்டல ஐ.ஜி, சென்னை மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர், மதுரை சரக டி.ஐ.ஜி, மதுரை போலீஸ் கண்காணிப்பாளர், பாதுகாப்புப்பிரிவு கண்காணிப்பாளர் ஆகியோருக்கு டி.ஜி.பி கடிதம் எழுதியுள்ளார்.

Police protection for Sagayam IAS…

அச்சுறுத்தல் இருப்பதால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, தேவையான நடவடிக்கையை 4 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீசை பாதுகாப்புக்காக சென்னை போலீஸ் கமிஷனர் நியமிக்க வேண்டும். சென்னையை விட்டு வெளியே பயணம் செல்லும்போது, போலீஸ் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அவரது சுற்றுப்பயண விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

அவர் சாலை வழியாக பயணம் மேற்கொள்ளும்போது, மாற்று போலீஸ்காரர் வரும் வரை அவருடன் ஆயுதம் ஏந்திய போலீஸ் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+