குன்றத்தூர் அபிராமியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவு
Recommended Video

சென்னை: குன்றத்தூர் அருகே குழந்தைகளை கொன்ற அபிராமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.

இதையடுத்து பைக்கை கோயம்பேட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் தப்பி சென்றார். இதனிடையே கள்ளக்காதலன் சுந்தரத்தை பிடித்த போலீஸார் அவரை வைத்தே அபிராமியை பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி, கள்ளக்காதலன் சுந்தரம் மூலமாக நாகர்கோவிலுக்கு வரவழைத்து அவரை போலீஸார் பிடித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications