இளம் பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எதிர்வீட்டுக்காரர்.. உடந்தையாக இருந்த கணவன்! போலீஸ் வலை
நாகர்கோவில்: மதுவிற்கு ஆசைப்பட்டு மனைவியை எதிர்வீட்டுக்காரர் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Recommended Video

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் மனைவி கவிதா (23, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). தம்பதிகளுக்கு ஒரு கைக்குழந்தையும் உள்ளது.
மதுவிற்கு அடிமையான ராஜனுக்குருடைய கணவருக்கு வயது 28. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனால் அந்த குடும்பம் வறுமையில் வாடியது.

எதிர்வீட்டுக்காரர் சதி
இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை கவனித்த எதிர்வீட்டைச் சேர்ந்த நபர் ராஜனை அழைத்துச் சென்று அவ்வப்போது மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் போதையிலிருந்த அவரிடம் மெதுவாக பேசி, "உனது மனைவியை எனக்கும் மனைவி போல இருக்கச் செய்தால் நீ கேட்கும் போதெல்லாம் மதுபானங்கள் வாங்கித் தருகிறேன்" என்று கூறியுள்ளார்.

பலாத்காரத்திற்கு உடந்தை
இதைக் கேட்ட ராஜனுக்கு கோபத்திற்கு பதில், மது மீது ஆசைதான் அதிகரித்துள்ளது. எனவே இந்த கொடூர திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதை தனது மனைவியிடம் சொல்லியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கணவனை திட்டியுள்ளார். ஆனால் கவிதாவை அடித்து உதைத்த ராஜன், எதிர் வீட்டுக்காரரை வரவழைத்து அவரை பலவந்தம் செய்ய உதவியுள்ளார்.

வீடியோ
இப்படி உறவு வைத்துக்கொள்வதை, எதிர் வீட்டு நபர், கவிதாவுடன் இருந்ததை செல்போனில் வீடியோ படமும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை கவிதாவிடம் காண்பித்து மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இதற்கும் ராஜன் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கொடுமைகள் தொடர்ந்ததால், கவிதா, தனது கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார்.

தகராறு
இதையடுத்து ராஜன், எதிர்வீட்டுக்காரர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ஒரு காரில் நாகர்கோவில் வந்து கவிதாவை தங்களுடன் வரும்படி அழைத்ததாக தெரிகிறது. ஆனால் கவிதா அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கும், கவிதாவின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

போலீஸ் வழக்குப்பதிவு
தகவல் அறிந்ததும் நாகர்கோவில் கோட்டார் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காரை விட்டுவிட்டு அவர்கள் 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். காரை போலீசார் கைப்பற்றினர். பாலியல் பலாத்காரம் தொடர்பாக போலீசில் சம்பந்தமாக புகாரும் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications