சென்னை கலவரத்தில் 140 வாகனங்கள் சேதம்.. போலீஸ் தகவல்
சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில 140 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 50 போலீஸ் வாகனங்கள் உட்பட 140 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை சென்னையில் நேற்று நடைபெற்ற ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு, சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் நேற்று 100க்கும மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 140 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
50 காவல்துறை வாகனங்கள் உட்பட 90 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் போது 35 போலீசார் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications