10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு
சென்னை: சென்னையில் 10ம் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி காதலித்து அவர்களுடன் நெருக்கமாகப் பழகி அவர்களின் ஆபாச படங்களை 'பேஸ்புக்கில் வெளியிட்ட காதல் மன்னனை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் கன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஞாயிறன்று இரவு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், தனது மகளின் ஆபாச புகைப்படத்தை சாமுவேல் என்ற இளைஞர் தனது 'பேஸ்புக்'கில் வெளியிட்டுவிட்டார். அந்த இளைஞர் எனது மகளை காதலிப்பதாகச் சொல்லி அடிக்கடி பின்தொடர்ந்து வந்துள்ளார். எனது மகள் அவரது காதலை ஏற்கவில்லை. திடீரென்று அந்த வாலிபர் தனது பேஸ்புக்கில் எனது மகளின் புகைப்படத்தை கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்.
இதுபோல ஏராளமான பெண்களை காதலித்து நெருக்கமாகப் பழகி அந்த இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட சாமுவேல் என்ற இளைஞரை அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அவர் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.
போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவி உள்பட 10 இளம்பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி உல்லாச லீலைகளில் காதல் மன்னன் சாமுவேல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. காதல் மன்னன் சாமுவேல் பிடிபட்டால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications