"3 கொலை ஸ்டீபன்" பதுக்கிய 400 கிலோ பொட்டாசியம் சயனைடு எங்கே? திணறும் போலீஸ்
சென்னை: சென்னையில் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபன் ராஜ் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் 400 கிலோ பொட்டாசியம் சயனைடு எங்கே என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபனுக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்திருக்கிறது. இதற்கு இடையூறாக இருந்த உறவினர்கள் உட்பட 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் கைதாகி தற்போது புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விஷ ஊசிக்கு பயன்படுத்திய பொட்டாசியம் சயனைடு வாங்கியதாக கூறப்படும் மும்பையில் உள்ள கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.
அக் கடையின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 400 கிலோ பொட்டாசியம் சயனைடு விஷத்தை ஸ்டீபன் ராஜ் வாங்கியுள்ளதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஸ்டீபனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் வீட்டருகே சுற்றித்திரிந்த பல நாய்களுக்கும், தெருவில் படுத்து உறங்கும் ஏழை மக்களுக்கும் விஷ ஊசியைப் போட்டு கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போது புழல் சிறையில் ஸ்டீபன் ராஜ் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பதுக்கி வைத்திருக்கும் 400 கிலோ பொட்டாசியம் சயனைடு எங்கே என போலீசார் தேடி வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications