Breaking News Live: தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. சென்னையில் முதல்வர் வீடு முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையம் மீது அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்தபோது போலீஸார் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை குளத்தூர் காவல் நிலையம் அருகே மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். அங்கிருந்த சிசிடிவி பதிவை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Police searches for those who throw petrol bomb in Tuticorin

May 26, 2018, 4:30 pm IST

செப் 27, 2016-இல் அப்பல்லோவில் ஜெ.பேசிய ஆடியோ ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைப்பு
May 26, 2018, 4:29 pm IST

திரையரங்கில் முதல்வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகன் விசிலடிப்பதை போல் உள்ளது மூச்சுத்திணறல்
May 26, 2018, 4:29 pm IST

ரத்தம் எடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள்- ஜெ.
May 26, 2018, 4:29 pm IST

140/80 இருக்கிறது என டாக்டர் சொல்ல அதற்கு ஜெ. எனக்கு அது நார்மல் என்கிறார்
May 26, 2018, 4:29 pm IST

எனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என ஜெ.கேட்கிறார்
May 26, 2018, 4:29 pm IST

ஜெயலலிதா மருத்துவமனையில் 52 விநாடிகள் பேசிய ஆடியோ வெளியானது
May 26, 2018, 3:45 pm IST

அதிகாலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் காலை உணவு வழங்க ஜெயலலிதா வலியுறுத்தல்
May 26, 2018, 3:45 pm IST

ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியீடு
May 26, 2018, 3:26 pm IST

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பு- ஆட்சியர்
May 26, 2018, 3:26 pm IST

முதல்வர் உத்தரவின் படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
May 26, 2018, 3:26 pm IST

கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி பதில்
May 26, 2018, 3:26 pm IST

தூத்துக்குடியில் ஆட்சியரிடம் மீனவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை
May 26, 2018, 3:26 pm IST

ஸ்டெர்லைட்டை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய 6 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம்
May 26, 2018, 2:57 pm IST

மருத்துவர் சிவக்குமார் 2 பென்டிரைவில் ஆடியோ பதிவுகளை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தார்
May 26, 2018, 2:57 pm IST

ஜெ.வுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது அவர் பேசிய ஆடியோ பதிவுகள் ஒப்படைப்பு
May 26, 2018, 12:23 pm IST

இணையதளத்தில் வெளியானது தேர்வு முடிவுகள்
May 26, 2018, 12:23 pm IST

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின
May 26, 2018, 12:03 pm IST

துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரிக்கை
May 26, 2018, 12:03 pm IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
May 26, 2018, 12:03 pm IST

தமிழக முதல்வர் பதவி விலகக் கோரி பெங்களூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
May 26, 2018, 12:03 pm IST

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை
May 26, 2018, 12:03 pm IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு எதிராக பெங்களூரில் நாம் தமிழர் கட்சி போராட்டம்
May 26, 2018, 11:50 am IST

பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன் பங்கேற்பு
May 26, 2018, 11:50 am IST

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பங்கேற்பு
May 26, 2018, 11:50 am IST

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
May 26, 2018, 11:39 am IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து முற்றுகை
May 26, 2018, 11:39 am IST

சென்னையில் முதல்வர் வீடு முற்றுகை
May 26, 2018, 10:58 am IST

தூத்துக்குடியில் 100 சதவீத கடைகள் திறந்துள்ளன- சந்தீப் நந்தூரி பேட்டி
May 26, 2018, 10:58 am IST

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை- கலெக்டர்
May 26, 2018, 10:49 am IST

11 பேரின் உடல்களில் இருந்த குண்டுகள் ஆபரேஷன் மூலம் அகற்றம்- எட்வின் ஜோ
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+