Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் எஸ்ஐ புகார் எதிரொலி: விஷ்ணுபிரியா வழக்கில் விசாரிக்கப்பட்ட வக்கீல் மாளவியா கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை : டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் விசாரணை செய்யப்பட்ட வக்கீல் மாளவியாவை பெண் எஸ்ஐயின் புகாரின்பேரில் மதுரை மதிச்சியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த ஆண்டு மர்மமான தூக்கு போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவின் நண்பர் என்ற முறையில் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிசிஐடி போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்.

Police SI complaints against Lawyer Malavia

இந்நிலையில் மதுரை அவனியாபுரம் பெண் சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமாவின் புகாரின்பேரில் வழக்கறிஞர் மாளவியாவை மதிச்சியம் போலீசார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் சத்யபாமா,27 சில நாட்களுக்கு முன்பு இரவு இரு சக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனை சாலையில் சென்றார். பின்தொடர்ந்த மதுரை வழக்கறிஞர் மாளவியா, 35 சப் இன்ஸ்பெக்டரை முந்திச்சென்று வழிமறித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சத்யபாமா மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சில மாதங்களுக்கு முன், வழக்கு தொடர்பாக மதுரை நீதி மன்றத்துக்கு வந்தபோது, மாளவியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைவிட்டு விலகினேன். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற என்னை வழிமறித்து தகராறு செய்தார். என்னை கீழே தள்ளியதில் காயம் ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக மதிச்சியம் இன்ஸ்பெக்டர் சாந்தி, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மாளவியாவை நேற்று முன்தினம் கைது செய்தார்.

முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்ததாக ஜீப் டிரைவர் பால்பாண்டி புகார் கொடுத்தார். அரசு சொத்தை சேதப்படுத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிந்தனர்.

நீதிமன்றத்தில் மனு

இதனிடையே போலீஸார் தன்னைத் தாக்கியதாகவும், தன்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடக் கோரியும் மாளவியா உயர் நீதிமன்றகிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், மதுரை சிறையில் அடைக் கப்பட்டுள்ள மனுதாரர் மாளவியாவை பார்வையிட்டு அவரது உடல் நிலையை பரிசோதித்து இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட மாளவியா, டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டவர். அப்போது, போலீஸார் தன்னை மிரட்டுவதாகக் கூறி, தற்கொலைக்கு முயன்றதாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாளவியா, டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு தான்தான் காரணம் என்ற ஒத்துக்கொள்ளச் சொன்னார்கள். நான் மறுத்தேன் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று கூறினார் மாளவியா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+