”எங்கே போகிறது உலகம்? - பேஸ்புக் லவ்வால் ஏமாந்த எஸ்.ஐ மகள்”

நாமக்கல் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. ராமசாமி இவரது மகள் ராதிகா என்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சேலம் நகரை ஒட்டி அமைந்துள்ள கோம்பைபட்டி மணியன்கரட்டை சேர்ந்தவர் என்ஜினியர் ஜெயபிரகாஷ்.ஃபேஸ்புக் மூலம் ஜெயபிரகாஷூம், ராதிகாவும் நண்பர்களாகினர். பின்னர் இருவரும் காதலித்தும் பின்னர் இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஜெயபிரகாஷ் வீட்டு முன் ராதிகா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தன்னை ஜெயப்பிரகாஷ் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார். அவரைத்தவிர வேறு யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி தர்ணா செய்தார்.
இதையடுத்து ஜெயப்பிரகாஷின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். அப்போது ராதிகாவை ஜாதி பெயர் சொல்லி ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் திட்டினர்கள் என்று கூறிய ராதிகா சேலம் டி.ஐ.ஜி. அமல்ராஜிடம் புகார் செய்தார்.
புகாரின் பேரில் அம்மாபேட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தும்படி டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். அம்மாபேட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ஜெயப்பிரகாஷ் அவரின் தந்தை லட்சுமணன் , தாய் சாந்தி ஆகியோர் மீது ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications