போலீஸ் பணம் கொடுக்குறவங்கள கைது செய்து பாதி வழியிலேயே விட்டுறாங்களே- குற்றம்சாட்டும் ஓபிஎஸ் டீம்!
ஆர்கே நகரில் நடக்கும் பண விநியோகம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த ஓபிஎஸ் டீம், பணம் கொடுப்பவர்களைக் கைது செய்து பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்யும் டிடிவி தினகரன் அணியினரை கைது செய்து, பாதி வழியிலேயே விட்டு விடுகிறார்கள் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே .பி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்கே நகரில் நடக்கவிருக்கும் இடைதேர்தலையொட்டி, அங்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் என ஆர்கே நகரே ரணகளமாக உள்ளது. இதில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் அணியினர் தான் பல்வேறு வகையில் பணம் மற்றும் பொருட்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் புகார் அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, மைத்ரேயன் எம்பி ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது கே.பி முனுசாமி கூறும்போது, ''தினகரன் அணியினர்தான் பணப்பட்டுவாடா செய்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஆட்சி நடப்பதால் புகாரின் பேரில் கைது செய்யப்படும் அவர்களின் ஆட்களை பாதி வழியிலேயே போலீசார் விட்டு விடுகின்றனர்'' என்று கூறினார்.
ஆனால், ''பாஜகவினர் நீங்களும் பண பட்டுவாடா செய்வதாகக் கூறுகிறார்களே'' என்ற கேள்விக்கு, ''தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா?'' என்று பதில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய கே.பி முனுசாமி, சசிகலா குடும்பத்தை விரட்டி விட்டால் அதிமுக நீண்ட நாட்கள் தமிழகத்தை ஆளும் என்று கூறினார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications