நெல்லையில் போலீஸ் வாகனத்தை 'தெறி'க்க விட்ட 140 அடி உயர விஜய் கட் அவுட்
திருநெல்வேலி: திருநெல்வேலியில், தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த 140 அடி உயரமுள்ள கட் அவுட் சரிந்து விழுந்ததில், போலீஸ் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்திற்குள் காவலர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.
நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள தெறி படம் நேற்று உலகம் முழுவதும் ரீலிஸ் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் 3 தியேட்டர்களில் தெறி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஒரு தியேட்டரில் தெறி படம் வெளியிடப்பட்டது. ரிலீஸ் நாளான நேற்று விஜய் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்திலும், வெளியே ரோட்டின் ஓரத்திலும் நடிகர் விஜய்யை வாழ்த்தி பல்வேறு கட்-அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் வைத்து இருந்தனர். தியேட்டர் வளாகத்தில் 140 அடி உயரத்தில் பிரமாண்ட கட் அவுட் ஒன்றையும் வைத்து இருந்தனர்.

தியேட்டர் வாசலில் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது. படத்தின் ரிலீஸ் நாள் என்பதால், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படம் தொடங்கிய நிலையில், திடீரென தியேட்டருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த 140 அடி உயர கட் அவுட் சரிந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் சேதமடைந்தது.
பலத்த காற்று வீசியதனாலேயே கட் அவுட் சரிந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வாகனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்











Click it and Unblock the Notifications