பெண் போலீஸ் கொலை செய்யப்பட்டாரா?.. மானாமதுரையில் பரபரப்பு!
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரைக் கொலை செய்து விட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகள் சர்மிளாதேவி ((25) புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். கட்டிகுளத்தைச் சேர்ந்த உறவினரான வீரராகவன் என்பவரை காதல் திருமணம் செய்தவர்.

ஒடிசாவில் ராணுவத்தில் வீரராகவன் பணிபுரிகிறார். கடந்த 2013ல் திருமணம் முடிந்து இரண்டரை வயதில் விகாஷ் என்ற ஆண்குழந்தை உள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக சர்மிளாதேவி உள்ளார். விடுமுறையில் கட்டிகுளத்திற்கு 20 நாட்களுக்கு முன் வந்துள்ளார். வீரராகவனும் இரண்டு மாத விடுமுறையில் கட்டிகுளம் வந்துள்ளார்.
வந்த இடத்தில் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், சர்மிளாதேவி வீட்டின் மாடி அறையில் தூக்கு போட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை வீரராகவனின் உறவினர்கள் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சர்மிளா தேவியை தூக்கி வந்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கட்டிகுளத்திற்கு உடலைக் கொண்டு சென்றுள்ளனர் உறவினர்கள்.
சர்மிளாதேவி உயிரிழந்த தகவல் அறிந்ததும் பதறிப் போன அவரது பெற்றோர் மானாமதுரை போலீசில் தனது மகளை கொலை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளனர். மானாமதுரை டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.
சர்மிளாவின் தந்தை லட்சுமணன் கூறுகையில் எனது மகள் தூக்கு போட்டு இறந்ததாக கூறப்படும் மாடி அறை ஓட்டு வீடு, அதில் தூக்கில் தொங்க வாய்ப்பில்லை. வீரராகவன் குடும்பத்தினர் அடித்து கொலை செய்துள்ளனர் என்றார்.
இந்த விவகாரம் மானாமதுரையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications