கஸ்தூரி பாட்டியின் அடுத்த கலக்கல் விளம்பரம் ரிலீஸ்..! இப்போ யாருக்கு ஆதரவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கஸ்தூரி பாட்டி.. இந்த பெயர் கடந்த சில தினங்களாக தமிழக அரசியலை கலக்கி வருகிறது.

திமுக ஆதரவு விளம்பரத்திலும், அதிமுக ஆதரவு விளம்பரத்திலும் வெவ்வேறு வகையில் உணர்வுகளை காட்டி கஸ்தூரி பாட்டி நடித்ததும், அதை நெட்டிசன்கள் சர்ச்சைக்குள்ளாக்கியதும் அறிந்த விஷயமே.

இறுதியில், பாட்டியே தனக்கு கட்சி விளம்பரம் என்று எதுவும் தெரியாது என்று பேட்டி கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை வந்தது.

இப்படி இரு தரப்புக்கும் ஆதரவாக நடித்த கஸ்தூரி பாட்டி, இப்போது ஏறத்தாழ எல்லா அரசியல் தரப்புக்கும் எதிராக ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

தேர்தலையொட்டி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள ஒரு குறும்படத்தில் கஸ்தூரி பாட்டி நடித்துள்ளார். அரசியல்வாதி ஒருவர் வீட்டுக்கு வந்து வாக்கு கேட்பதை போலவும், அப்போது வாக்களிக்க பணம் தரப்படுவதை போலவும் காட்சி உள்ளது.

இந்த பணத்தை எடுத்துக்கொண்டு, தனது டிரங்க் பெட்டிக்குள் வைக்கும்போதுதான் பாட்டிக்கு தெரியவருகிறது, தான் சம்பாதித்து வைத்த பணம் அங்கு மாயமாகிவிட்டது என்பது.

நம்மிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான், நமக்கு லஞ்சமாக திரும்பி வருகிறது என்பதே இந்த குறும்படம் சொல்லும் பாடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+