ஒரே நேரத்தில் 3 முக்கியத் தலைவர்கள் ஒரே மருத்துவமனையில்.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி என மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நேரத்தில் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும மூன்று பேருமே ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோ. ராமசாமிக்கு சமீப காலமாகவே உடல் நலம் சரியில்லை. ஏற்கனவே அவர் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் வைகோவும், விஜயகாந்த்தும் அதே அப்பல்லோவில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த்து நெஞ்சுவலி என்று முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் நெஞ்சு எரிச்சல் காரணமாக அவரை சேர்த்துள்ளதாக தகவல்கள் கூறின. அவருக்கு இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அதேசமயம், மதிமுக பொதுச் செயலாளர் கடும் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் அப்பல்லோவில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்படி தமிழகத்தின் மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications