திமுகவை விட்டு விலகி வெகுதொலைவு சென்றுவிட்ட மாஜி 'புரபசர்'
திமுக தலைமைக்கு நெருக்கமான மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர் கட்சியைவிட்டே விலகி வெகுதூரம் சென்றுவிட்டாராம்.
சென்னை: திமுக தலைமையின் நிழல்களில் ஒருவராக இருந்த அதி முக்கிய பிரமுகர் அக்கட்சியை விட்டே விலகி வெகுதொலைவு சென்றுவிட்டதுதான் இப்போது ஹாட் டாபிக்.
கொள்கைக்காரராக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டு ஒருகட்டத்தில் அசைக்க முடியாத அமைச்சராக, திமுகவின் குறுநில மன்னர்களில் ஒருவராக உயர்நிலைக்கு வந்தவர் அந்த அதிமுக்கிய பிரமுகர். இதன் உச்சகட்டமாக திமுக தலைமையின் நிழலாகவும் வளர்ந்தார்,

ஆனால் அண்மைக்காலமாக திமுகவை விட்டு விலகி அவர் வெகுதொலைவு பயணித்துவிட்டார். முதுபெரும் தலைவரின் நிழலாக இருந்த நம்மை கிள்ளுக்கீரை போல மாற்றி விட்டார்களே என்கிற அடுப்படி அரசியல் மீதான கோபம்தான் இதற்கு அடிப்படை காரணம் என்கிறார்கள்.
அதேசமயம், இன்னொரு பக்கம் இவர் "சைட்" எடுக்க, திமுக ஆட்சியில் குவித்த சொத்துகள், கல்வி நிறுவனங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் காரணம். அவரைப் பொறுத்தவரை திமுகவால் தனக்கு இனி தேறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆகையால் "நடிகர்" கட்சியில் ஐக்கியமாவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தியுள்ளாராம்.
இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்கிற தகவல் இவர் தற்போது இருக்கும் கட்சியின் தலைமையின் காதுகளுக்கு போய்விட்டது. இதன் உச்சம்தான் சட்டசபை வளாகத்தில் நடந்த விரும்பத்தகாத விவகாரம் என்கிறார்கள்.
அன்றோடு இவர் சட்டசபைக்கும் போவதில்லை... அறிவாலய பக்கமும் எட்டிப்பார்ப்பது இல்லை. இந்த நிலையில் தமது புது பிசினஸை வாடகை அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருக்கும் பிரமுகர் ஒருவரை வைத்து திறக்க செய்திருக்கிறார். இதனை முன்வைத்துதான் அண்ணன் ரொம்ப தூரமாக போயிட்டாரே என்கிற விவாதம் திமுகவில் நடைபெற்று வருகிறது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications