அதிகார மோகத்தால் தலைநகரில் தனியே... தன்னந்தனியே.. நடுத்தெருவில் தத்தளித்த தமிழக ’பெருந்தலை’

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிகாரம் மனிதர்களை எப்படி பாடாய்படுத்தும் என்பதை நிச்சயம் அந்த தமிழகத்து பெருந்தலை கடந்த வாரம் உணர்ந்திருப்பார். என்னாதான் அதிகாரம் கிடைத்தாலும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்கிற மனக்குறை.

பிக்பாஸை சந்திக்க லாபியிஸ்டாக இருந்து வந்தவரும் இப்போது அதிருப்தியில் இருக்கிறார். புதியதாக ஒரு தொடர்பு கிடைக்கிறது.

Political Gossip on TN leader

நம்பிக்கையோடு தலைநகரில் தரையிறங்கினார். அங்கு தொடங்கியது சோதனை. எங்கே போவது என தெரியாமல் புதிய தொடர்பை அழைக்கிறார். அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்.

இதையடுத்து சகாக்கள் குழுமியிருந்த இடத்துக்குப் போனார்..அங்கேயும் யாருமே கண்டுகொள்ளவில்லை.. வழக்கமாக தங்கும் பங்களா பக்கம் எட்டிப் பார்க்கிறார்...ம் ஹூம்...

வேறவழியில்லாமல் தங்கும் இல்லத்துக்கு திரும்பினார்.. அங்கேயும் பெரிய மரியாதை இல்லை..

இத்தனைக்கும் ஜால்ராக்கள் அங்குதான் முகாமிட்டிருந்தனர்.. மருந்துக்கு கூட நலம் விசாரிக்காமல் அறைகளுக்குள் பதுங்கிவிட்டனர்.

அதிகாரத்தைத் தேடிப் போய் அவமானப்பட்டு நிற்கிறோமே என புலம்பியபடியே நீரைத் தராத மண் வழியாக தமிழகம் வந்தார் அந்த பெருந்தலை.

அதிகார மோகம் அத்தனை அவமானகரமானது!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the political gossip on Tamilnadu leader.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற