அவங்க நல்லா அடிச்சுக்கட்டும்.. ஜாதகப்படி நான்தான் சிஎம்.. அசால்ட்டாக கூறும் "பெண் எம்.பி'
அடிதடி அரங்கேறினாலும் ஜாதகப்படி தாமே முதல்வர் என நம்பிக்கையோடு இருக்கிறாராம் அந்த பெண் எம்.பி.
சென்னை: அதிமுகவே அணிகளாக பிரிந்து சேர்ந்து பிரிந்து ஆட்சியே அம்போவாகும் நிலைமையில் இருக்கிறது... இதையெல்லாம் கண்டுகொள்ளாத அதகள பெண் எம்பி ரொம்பவே சீரியசாக, யாரோ அடிச்சுக்குங்க.. என் ஜாதகத்துல எனக்கு சிஎம் போஸ்ட்னு இருக்கிறதை நான் நம்பி கொண்டிருக்கிறேன் என கமெண்ட் அடித்திருப்பதுதான் அக்கட்சி வட்டாரங்களில் கிசுகிசுவாக பேசப்படுகிறது.
நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அந்த பெண் எம்.பி. அவரது வியூகங்களையும் லாபிகளையும் பார்த்து ஜெயலலிதா ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போய் பதவிகளை அடுத்தடுத்து கொடுத்தார்.

புலம்பும் குடும்பம்
காலத்தின் கோலம் என்னவெல்லாமோ நடந்துவிட்டது.. ஆனாலும் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் கனவு எதுவும் பலிக்கவில்லை. இப்போதுகூட அந்த அம்மா விவகாரத்தில் நிதானமாக இல்லாமல் போனதுதான் நம்ம குடும்பம் செய்த முதல் தப்பு என புலம்புகிறார்கள் அவர்கள்.

லாபியிஸ்ட்
வடக்கேயே முகாமிட்டிருக்கும் அந்த எம்.பி. தமக்கான லாபிகளை எந்த கட்சி என்றெல்லாம் பார்க்காமல் ரொம்பவே வலுவாக்கி வைத்திருக்கிறார். எப்போதாவது தமிழகம் பக்கம் வந்துவிட்டு செல்கிறார்.

ஜாதகத்தில் சிஎம்
அப்படி சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்துக்கு வந்துவிட்டு போனார். அப்படி தமது உறவினர்களிடம் பேசும்போது, என்னமோ இவங்க யாரெல்லாம் அடிச்சுகிட்டு போகட்டும்.. எனக்கு எதுவும் கவலை இல்லை. ஏன்னா என்னோட ஜாதகத்துல சி.எம். போஸ்ட் கண்டிப்பாக கிடைக்கும்னு இருக்கு; எனக்கு நம்பிக்கை இருக்கு என அசால்ட்டாக சொல்லியிருக்கிறார்.

அமைச்சர் பதவி?
தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தமக்கும் ஒரு இடம் கிடைக்கும் என்கிற லாபியில் பிசியாக இருக்கிறாராம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications