சுவாதி கொலையாளி ராம்குமார் கைது ஆறுதல் தருகிறது... ஜி.ஆர்., திருமா
சென்னை: பொறியாளர் சுவாதியை படுகொலை செய்த ராம்குமாரை போலீசார் கைது செய்தது ஆறுதல் தருகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்த கொலையாளி ராம்குமாரை செங்கோட்டை அருகே போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

இக்கைது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், சுவாதி கொலையில் கொலையாளியை கைது செய்துள்ள போலீசாரின் திறமையை பாராட்டுகிறோம். கொலையாளியை கைது செய்தது ஆறுதல் அளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி பொறுத்த அரசு முன் வரவேண்டும் என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், சுவாதி கொலையில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பாராட்டுகிறேன். இதில் கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் இனி இது போன்ற கொடூர சம்பவங்கள் பொது இடங்களில் நடக்காத அளவுக்கு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், சுவாதி கொலையில் போலீசார் திறமையாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளதை பாராட்டுகிறேன். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications