சோபியா கைது.. தமிழகம் விரைவில் நக்சலைட்டுகளின் நகரம் என அறிவிக்கப்படும்.. கொதிக்கும் ஜோதிமணி!
தமிழகத்தை நக்சலைட்டுகளின் நகரம் என பாஜக விரைவில் அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தை நக்சலைட்டுகளின் நகரம் என பாஜக விரைவில் அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து, பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோபியா என்ற மாணவி கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக தூத்துக்குடி மாணவி சோபியாவை கைது செய்ததற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
|
மக்களின் இடி முழக்கம்
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி பதிவிட்டுள்ள டிவிட்டில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, #சோபியா வின் குரல் தனிநபருடையதல்ல. தொடர்ந்து மக்களை சுரண்டும், சுதந்திரத்தை நசுக்கும், பெரும் முதலாளிகளை மட்டும் ஆதரிக்கும்,வன்முறையை, ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் பாசிச ஆட்சிக்கு எதிரான எளிய மக்களின் இடிமுழக்கம். இதுவிரைவில் இந்தியாவெங்கும் ஒலிக்கும்
|
நக்சலைட்டுகளின் நகரம்
இதேநிலை தொடர்ந்தால் தமிழகம் நக்சலைட்டுகளின் நகரம் என பாஜகவால் விரைவில் அறிவிக்கப்படும். கிராமப்புற நக்சலைட்டுகள் என்பதையும் சேருங்கள். இல்லையெனில் என்னைபோன்ற கிராமப்புறத்தினர் இந்த மதிப்பு மிக்க குறிச்சொல்லில் இருந்து விடுபட்டுவிடுவோம்.
|
பிரதமரின் முழக்கத்துக்கு?
சோபியாவின் பாசிச பாஜக ஒழிக என்ற முழக்கம் குற்றம், அதற்கு சிறை தண்டனை என்றால், மரியாதைக்குரிய பிரதமரின் ஆபத்தான அச்சுறுத்தும் முழக்கமான காங்கிரஸ் முக்த் பாரத் பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்?
|
உரக்கச் சொல்வோம்
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான ஆளூர் ஷா நவாஸும் பாஜகவுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
பொது இடத்தில்
'பாஜக வளர்க' என முழக்கமிட உரிமை உண்டு எனில்,
'பாஜக ஒழிக' என முழங்கும் உரிமை எமக்கு உண்டு!
தங்கை சோபியாவின் குரல்
தமிழ் நிலத்தின் குரல்..
உரக்கச் சொல்வோம்
பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக!
|
கைது செய்யப்பட்டார்களா?
விமானத்தில் முழக்கம் எழுப்புவது பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்கிறார் @sumanthraman
விமானத்திலிருந்து @DrTamilisaiBJP இறங்கியதும் வரவேற்க வந்தவர்கள், பாரத் மாதாகீ ஜே என்று முழங்கினார்களே! அது பயணிகளுக்கு இடையூறு இல்லையா? அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் ஆளுர் ஷா நவாஸ்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications