ஜெயலலிதா முதல் டி.ராஜேந்தர் வரை வழக்கறுத்தீஸ்வரரை தஞ்சமடைந்த விஐபிக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்குகளில் சிக்கி வறுபட்டவர்கள் அதிலிருந்து விடுபட கடைசியில் தஞ்சமடைவது இறைவனைத்தான். சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவிற்காக தீச்சட்டி ஏந்தியது முதல் உருள்வலம், குண்டம் மிதித்தது, காவடி எடுத்தது பாதையாத்திரை போனது என பலரும் நம்பியது இறைவனைத்தான்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முன் கோபத்தைக் குறைக்க விஸ்வாமித்திரர் கோவிலுக்குப் போய் யாகம் செய்தார். ஆனாலும் விஜயகாந்தின் கோபம்தான் குறைந்தபாடில்லை.

2ஜியோ, சொத்துக்குவிப்பு வழக்கோ, பீப் சர்ச்சையோ எந்த வழக்கில் சிக்கினாலும் பிரபலங்கள் நாடியது காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரரைத்தான். இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட வழக்கில் சிக்கிய பின்னர் வழக்கறுத்தீஸ்வரரை தஞ்சமடைந்தனர்.

இறைவன் தீர்த்து வைத்த வழக்கு

இறைவன் தீர்த்து வைத்த வழக்கு

முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. இது தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தாராம். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என்ற பெயரோடு அழைக்கின்றனர்.

சத்தியம் நம்பிக்கை

சத்தியம் நம்பிக்கை

அக்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பினரை இக் கோவிலுக்கு அழைத்துவந்து சத்தியம் செய்ய சொல்வார்கள். காரணம் பொய் சத்தியம் செய்தால் அவர்களது குடும்பம் அழிந்துவிடும் என்பது இக்கோவிலின் மீதான பெரும் நம்பிக்கை.
காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள் என்பது கோவிலின் தல வரலாறு. அதனால்தான் அரசியல்வாதிகளால் நிரம்பி வழிகிறது இக்கோவில்.

சொத்துக்குவிப்பு வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கு

பெங்களூருவில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சூடுபிடித்த நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே வாகனத்தில் வந்து முதல்வர் பெயரில் அபிஷேகம் மற்றும் பூஜை செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பூஜைக்குப்பின் முதல்வருக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் ஒரு மாலை அடங்கிய மஞ்சள் நிற கைப்பை ஒன்றை பெற்றுக்கொண்டு சென்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றாலும் கடைசியில் விடுதலை அடைந்து இழந்த பதவியையும் பெற்றுள்ளார் ஜெயலலிதா.

சசிகலா சுவாமி தரிசனம்

சசிகலா சுவாமி தரிசனம்

ஜெயலலிதாவின் சார்பாக சசிகலாவே நேரடியாக வந்து வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து சென்றிருக்கிறார். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் எத்தனையோ பிரபல கோவில்கள் இருக்க, வழக்கறுத்தீஸ்வரர் கோவில்தான் வழக்குகளில் சிக்கிய விஐபிக்களுக்கு ஸ்பெசலான கோவில். வழக்கறுத்தீஸ்வரரை வழிபட்டால் வழக்குகளில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையினாலேயே எல்லோரும் வழக்கறுத்தீஸ்வரரை சரணடைகின்றனர். அதற்கும் சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்கின்றனர்.

கனிமொழி கைதும் ஜாமீனும்

கனிமொழி கைதும் ஜாமீனும்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான கனிமொழி திகார் சிறையிலடைக்கப்பட்டார். அப்போது இக்கோவில் பற்றி கேள்விப்பட்ட ராஐாத்தியம்மாள் தனது ஆதரவாளர்களை அனுப்பி இக்கோவிலில் பூஜை நடத்தினார். கனிமொழி சார்பாக தி.மு.க. ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார். எதேச்சையாக அடுத்த சில வாரங்களில் கனிமொழிக்கு ஐாமீன் கிடைத்தது. இது பூஜையின் பலனால்தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாக தகவல் வெளியானது.

கார்த்தி ப.சிதம்பரம்

கார்த்தி ப.சிதம்பரம்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்திற்கும், தலைமைக்கும் கொஞ்சம் முரண்பாடு எழுந்த நேரத்தில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துசென்றிருக்கிறார்.

பீப் பாடலும் டி.ராஜேந்தரும்

பீப் பாடலும் டி.ராஜேந்தரும்

பீப் பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு சிம்பு குடும்பத்தினரை படுத்தி எடுக்க, டி.ராஜேந்தரும் கடந்த வாரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் யாகம், சிறப்பு பூஜை என்று அமர்களப்படுத்தியுள்ளார்.

வடமாநில தலைவர்கள்

வடமாநில தலைவர்கள்

உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமன்றி வடமாநில பிரமுகர்களும் இதேபோல் கோவில்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் நடந்த ஊழல் (ஆதர்ஷ் ஊழல்) வழக்கில் சிக்கி, பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக்சவான், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளார். இப்படி ஊழல் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் தஞ்சமடையும் கோவிலாக மாறியுள்ளது வழக்கறுத்தீஸ்வரர் கோவில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+