For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. ஏமாற்றிவிட்டாரே.. என்னைச் சொல்லி குற்றமில்லை... உன்னைச் சொல்லி குற்றமில்லை... விரக்தியில் தா.பா

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: "ஜெயலலிதாவிடம் என்னை ஏமாற்றிவிட்டார்.. என்னைச் சொல்லியும் குற்றமில்லை... உங்களைச் சொல்லியும் குற்றமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் விரக்தியில் கூறியுள்ளார்.

தூத்துக்குடி சிதம்பர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜா ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா பாண்டியன் பேசியதாவது:

Political parties seeking votes late in the night not acceptable says D. Pandian

மாநில தேர்தல் ஆணையம் இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் வாக்கு கேட்கலாம் என்று அறிவித்துளளது. இரவு 10 மணிக்கு மேல் கதவை தட்டுகிறவன் வேட்பாளராக இல்லாமல் கழுத்தை அறுப்பவனாக இருந்தால் என்ன செய்வது, எப்படி பார்ப்பது.

தேர்தல் ஆணைய உத்தரவை காரணம் காட்டி வியாபாரிகள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். ரூ.1 லட்சம் எடுத்தால் கணக்கில் ரூ.80 ஆயிரமே வருகிறது. ஆதாரம் காட்டினால் ரூ.50 ஆயிரம் கொடுக்கிறார்கள். இப்படி நவீன கொள்ளையின் மூலம் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரச்சனையில் ஓரே மேடையில் நானும், வைகோவும் பேசினோம். அவர் தடம் மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நன்றாக பழகியவன். பின்னர் ஏமாற்றப்பட்டவன். என்னை சொல்லியும் குற்றமில்லை. உங்களை சொல்லியும் குற்றமில்லை. காலம் பதில் சொல்லும்.

இவ்வாறு தா. பாண்டியன் விரக்தியில் பேசியுள்ளார்.

English summary
The election commission has said that door-to-door canvassing can be continued after 10.00 p.m. However CPI leader D. Pandian had questioned this decision. He has said that parties might make use of this time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X