அத்தனை கட்சி பூத் ஏஜெண்டுகளுமே ஸ்லீப்பர் செல்கள்... ஆர்.கே.நகரை தெறிக்க விடும் தினகரன் பார்முலா

ஆர்.கே.நகர் தேர்தலில் அத்தனை கட்சி பூத் ஏஜெண்டுகளையும் வளைத்துப் போட்டு ஸ்லீப்பர் செல்லாக்கிவிட்டாராம் தினகரன்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆர்கே நகரில் தினகரன் பக்கம் சாயும் அதிமுக நிர்வாகிகள்...பதட்டத்தில் கோட்டை- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் அனைவரையுமே தம்முடைய ஸ்லீப்பர் செல்களாக்கிவிட்டாராம் சுயேச்சை வேட்பாளர் தினகரன். இதனால் ரொம்பவே பதறிப் போயிருக்கிறது அதிமுகவும் திமுகவும் என்கின்றன கள தகவல்கள்.

    ஆர்.கே.நகரைப் பொறுத்தவரையில் எத்தனை நூறு கோடி செலவானாலும் பரவாயில்லை... எம்.எல்.ஏ.வாகியே தீருவது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு விளையாடுகிறாராம் தினகரன். அந்த கட்சி, இந்த கட்சி, தேர்தலில் போட்டியிட்டார்கள், போட்டியிடவில்லை என பாரபட்சமே இல்லையாம்.

    ஒரு நபரால் ஒரு ஓட்டு கிடைப்பது உறுதி என்றாலும் விலைதானாம்.. இப்படி ஒரு வாக்கு பர்சேஸிங்கை தமிழகம் இதுவரை பார்த்ததே இல்லையாம். அதுவும் தமிழகத்துக்கு திருமங்கலம் பார்முலாவை கற்றுக் கொடுத்த திமுகவெல்லாம் ஆர்கே நகரில் தினகரனின் வியூகத்தால் 3-வது இடம் கிடைத்தாலே ஆச்சரியம் என மென்று விழுங்குகிறதாம்.

    தினகரனை முடக்க

    தினகரனை முடக்க

    இதனால் தினகரனை முடக்கிப் போடும் வேலைகளும் நடக்கின்றன. இதன் ஒருபகுதியாகத்தான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்கும் டிசம்பர் 21-ந் தேதி டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாம். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது குறித்து அவருடைய வழக்கறிஞர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    ரவுடிகள் துணையோடு

    ரவுடிகள் துணையோடு

    ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டால் பா.ஜ.கவுக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் கட்டாயம் தேர்தலை நடத்துவார்கள். என் மீது வழக்குப் போட்டு முடக்க நினைப்பார்கள். எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை' என ஆதரவாளர்களை முடுக்கிவிட்டிருக்கிறாராம் தினகரன். தேர்தல் பணிகளுக்கு தினகரன் தேர்வு செய்திருப்பது முழுக்க உள்ளூர் ரவுடிகள் மட்டும்தான். இந்த ரவுடிகள் மீது காவல்நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன. தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்னரே இவர்களை எல்லாம் தினகரன் தரப்பினர் சரிக்கட்டிவிட்டனர். எவ்வளவு சண்டைகள் வந்தாலும் இவர்களைக் கையில் வைத்திருப்பது நல்லது என தினகரன் நினைக்கிறார்.

    வேட்டையாடும் போலீஸ்

    வேட்டையாடும் போலீஸ்

    காரணம், வாக்குப்பதிவு நாளில் மிகப் பெரிய கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட்டாலும் இந்த அடியாட்களை வைத்து கொண்டு எதிர்கொள்ளலாம் என்பதுதான் காரணம். இந்த ரவுடிகளை வேட்டையாடக் களமிறங்கியிருக்கிறது போலீஸ். தொகுதி மக்களிடம் சென்று பேசும் ரவுடிகள் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகின்றனர். கடந்தவாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். கைது நடவடிக்கையில் போலீஸ் இறங்கினால், ஜெயா டி.வி மூலம் அவர்களது குடும்பத்தைப் பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்து பதிலடி தருகிறார்களாம்.

    செம கவனிப்பாம்

    செம கவனிப்பாம்

    இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொகுதிக்குள் வேட்பாளரை அறிவிக்காத கட்சிகளின் நிர்வாகிகளை தினகரன் தரப்பினர் சந்தித்துப் பேசி வருகின்றனர். வாக்காளர்களுக்குக் கொடுப்பது தனிக்கணக்கு. உங்களுக்கு சிறப்பான கணக்கு ஒன்று இருக்கிறது. உங்கள் கட்சித் தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் என எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? இவர்கள் டி.டி.வியை ஆதரிக்கிறார்களா என்ற விவரத்தைக் கோரியுள்ளனர். பட்டியலில் உள்ள பலத்துக்கு ஏற்ப, எதிர்பாராதா தொகை ஒன்றும் கொடுக்கின்றனர். தேர்தலில் டி.டி.வி வெற்றி பெற்றால், இதைவிடக் கூடுதலாக கவனிப்போம். உங்களால் முடிந்த அளவுக்கு வாக்கு சேகரியுங்கள். என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள்' என நம்பிக்கையூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். டி.டி.வியின் வலையில் பல கட்சி நிர்வாகிகளும் வகையாகச் சிக்கியுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு தினகரன் அணியில் இவர்கள் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என்றே கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+