சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் 125வது பிறந்தநாள்... ஜெயலலிதா, வைகோ மலர்தூவி மரியாதை
சென்னை: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் அம்பேத்கரின் உருவ சிலைக்கும், உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ்வில் அம்பேத்கர் பிறந்தார். மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியான இவரின் முழு வாழ்க்கையையும் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணித்தார்.
அம்பேத்கர் சாதாரண குடிமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். அவரின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. அம்பேத்கர் வாழ்க்கையோடு தொடர்புடைய பகுதிகளான நாகபுரி, மும்பை ஆகிய இடங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

ஜெயலலிதா மரியாதை
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா,போயஸ் தோட்ட இல்லத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஓ.பி.எஸ்...
கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் மரியாதை
சென்னை துறைமுகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பி.வி ரமணா, வளர்மதி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வைகோ மரியாதை
துறைமுகம் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் மரியாதை
திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கோயம்பேடிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications