பொள்ளாட்சி ஜெயராமன் மகன் சென்ற கார் விபத்து: மாணவி பலி- 4 பேர் படுகாயம்
திருப்பூர்: திருப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கல்லுாரி மாணவி பலியானார். துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் மகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். இவரது மகன், பிரவீன், 20. கோவை தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

கோவையில் இருந்து நேற்று மாலை ஒரு காரில் நண்பனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தனியார் பொறியியல் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள், 4 மாணவிகள் ஆகிய 6 பேர் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன்,19 ஓட்டினார்.
காரில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மதன் என்பவரின் மகள் சுரேகா,18, கோவை சாய்பாபா காலனி மந்த்ரா,18, திருப்பூர் செட்டிபாளையம் பெரியநாயகி,18, கோவை ரத்தினபுரி சுவேதா,18, கோவை ரேஸ்கோர்ஸ் திலக்,19 ஆகியோர் பயணம் செய்தனர். அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் கார், சாலையின் மறுபுறம் பாய்ந்து ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கி வந்த இன்னொரு கார் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவி சுரேகா பலியானார். உடன் சென்ற, திலக், சுவேதா, மந்த்ரா, பெரியநாயகி, ஆகிய மாணவியரும் படுகாயமடைந்தன. பிரவீணும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்தில் கவிழ்ந்த கார் மீது, மற்றொரு கார் மோதியதில், ஜோசப், லிங்கன் ஆகியோரும் படுகாயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications