பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் கடந்த காலங்களில் திமுக, அதிமுக கட்சிகளே மாறி மாறி வென்றுள்ள. இந்த முறை ஈஸ்வரசாமி திமுக சார்பில் போட்டியிட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் கார்த்திகேயன் களமிறங்குகிறனர். தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் ஈஸவராமி முன்னிலையில் இருந்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் ஈஸ்வரசாமி (திமுக), ஏ.கார்த்திகேயன் (அதிமுக), சுரேஷ் குமார் (நாம் தமிழர்) கே.வசந்தராஜன் (பாஜக) உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் என்பவர் வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்குப் பதிலாக ஈஸ்வரமூர்த்திக்கு திமுக தலைமை வாய்ப்பு அளித்தது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் திமுக நிர்வாகிகள் வேலை செய்துள்ளனர்.
அதேநேரம் கடந்த 2021இல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்த பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளையும் அதிமுகவே வென்று இருந்தது. இதனால் அதிமுகவும் இங்கு கடும் போட்டி கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். இது தவிர நாம் தமிழர் சார்பில் சுரேஷ் குமார், பாஜக சார்பில் கே.வசந்தராஜன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்தார். இதற்கிடையே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இரண்டாவது இடம் பிடித்த நிலையில், பாஜக 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
இந்த பொள்ளாச்சி தொகுதியில் திமுகவும் அதிமுகவும் தான் மாறி மாறி வென்றுள்ளன. இங்கே அதிகபட்சமாக அதிமுக மொத்தம் ஏழு முறை வென்றுள்ளது. திமுக இடைத்தேர்தல் சேர்த்து 4 முறை வென்றுள்ளன. இது தவிரக் காங்கிரஸ் 3 முறை, மதிமுக இரண்டு முறை, தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது.
கடந்த 1980க்கு பிறகு கடந்த தேர்தலில் தான் திமுக முதல்முறையாக இந்த தொகுதியைக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொகுதியை திமுக தக்க வைக்குமா.. அல்லது அதிமுக திருப்பி அடித்து இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றுமா என்பதை நாம் தெரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
சி.கிருஷ்ணன் (மதிமுக)- 3,64,988
ஜி.முருகன் (அதிமுக ) 2,44,067
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கே. சுகுமார் (அதிமுக)- 3,05,935
கே.ஷாமுகசுந்தரம் (திமுக)- 2,59,910
பெஸ்ட் எஸ். ராமசாமி (கொங்கு நாடு மக்கள் கட்சி)- 1,03,004
கே.பி.தங்கவேல் (தேமுதிக)- 38,824
வி.எஸ். பாபா ரமேஷ் (பாஜக)- 16,815
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
மகேந்திரன் (அதிமுக)- 4,17,092
ஆர் ஈஸ்வரன் (கொமதேக)- 2,76,118
பொங்கலூர் என்.பழனிசாமி (திமுக)- 2,51,829 செல்வராஜ் (காங்கிரஸ்) 30,014 3.00%
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
சண்முகசுந்தரம் (திமுக)- 5,54,230
மகேந்திரன் (அதிமுக)- 3,78,347
மூகாம்பிகா (மக்கள் நீதி மய்யம்)- 59,693
சனுஜா (நாம் தமிழர்)- 31,483
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications