நெல்லை அருகே பாலிடெக்னிக் மாணவர்களிடையே மோதலால் பதட்டம்
நெல்லை: நெல்லை அருகே நேற்றிரவு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு குண்டல் தெருவை சேர்ந்தவர் சுமிதன். ராஜா தெருவில் குடியிருப்பவர் அஸ்வின், ராபின். இவர்கள் மூவரும் செய்துங்கநல்லூரில் உளள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.
ஒரே கல்லூரியில் படித்த போதும் 3 பேரும் அடிக்கடி மோதி கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மோதல் தொடங்கி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு சுமிதன் அதே தெருவில் உள்ள செல்போன் கடைக்கு ரீ சார்ஜ் செய்ய சென்ற போது அங்கு நின்ற அஸ்வின், ராபின் இருவரையும் கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கல், மற்றும் தடி கொண்டு சுமிதனை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ், குலசேகரபட்டிணம் எஸ்ஐ குமாரமுத்து, மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மேற்படி இரண்டு மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications