89 கடத்தல் சிலைகளை வைக்க மியூசியத்தில் இடம் மறுப்பு.. அரசு மீது பொன் மாணிக்கவேல் பரபர குற்றச்சாட்டு
Recommended Video

சென்னை: சென்னை தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மியூசியத்தில் வைக்க இடம் இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவர் அரவிந்த்சாமி நடித்த மின்சார கனவு படத்தில் நடித்தவர். இவர் உடைகள் ஏற்றுமதி தொழில் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பழங்கால கற்சிலைகள் இருப்பது தொடர்பாக சிலை கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளன் தெரிவித்தார்.
[முஸ்லிம் வழிபாட்டில் மசூதி அவசியமா? ஏன் இந்த வழக்கு? என்ன பின்னணி?]
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். இதில் வீட்டில் காட்சிப்படுத்த 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எள்ளளவும் சந்தேகம் இல்லை
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பொன் மாணிக்கவேல் கூறுகையில் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 22 தூண்களும் அடங்கும். இங்கு இருக்கக் கூடிய சிலைகள் எல்லாமே தெய்வத்தின் சத்தியமாக இந்து ஆலயங்களில் வைக்கக் கூடிய சிலைகள். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

திருடப்பட்டவை
இதன் டைமன்ஷன்கள் மிகவும் பெரியதாக உள்ளன. இன்னொன்று இவை பழமையான சிலைகள் அல்ல, தொன்மையானவை. இவை அனைத்தும் கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

100 ஆண்டுகளுக்கு மேலானது
எந்த கோயிலில் திருடப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் இந்த சிலைகளை மியூசியத்தில் வைக்க இடமில்லை என்று அதிகாரிகள் சொல்லிவிட்டனர். இதனால் சிலைகளை எங்கே கொண்டு செல்வது என்பது தெரியவில்லை. இதனால் திகைத்துள்ளோம். இந்த சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு மேலானது.

சிலைகளை விற்றார்
தற்போது கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு 5 லாரிகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். விற்பனை உரிமம் இல்லாதவரிடம் சிலைகளை வாங்கியுள்ளார் ரன்வீர்ஷா. ரன்வீர்ஷா யார் யாரிடம் சிலைகளை விற்றார் என்றும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
{document1}












Click it and Unblock the Notifications