அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு… பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து
அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சசிகலா ஒப்புதலும் தெரிவித்தார். இதனையடுத்து, சசிகலாவிற்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக சம்மதத்தை பெறுவதற்காக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றது. பின்னர், சசிகலாவிடம் தீர்மான நகலை முதல்வர் ஒப்படைந்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தத் தகவல் பொதுக்குழுவிலும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சசிகலாவிற்கு தனது முதல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு வந்த இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சசிகலாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
Jayalalitha: "அஇபுதமமுக"! ஆமா, ஜெயலலிதாவின் பெயரை சசிகலா தவிர்த்தது ஏன்? இந்த 5 காரணங்கள்தானா? -
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
Sasikala: சசிகலா கட்சி பெயர் அஇபுதமமுக! சட்டசபை தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications