மாப்ள அவரு தான்.. ஆனா சட்டை... ‘கேப்டன்’ அணி குறித்து பொன்.ராதா கிண்டல்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆக வாய்ப்பே இல்லாவிட்டாலும், மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறி நக்கலடித்துள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேமுதிகவைத் தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர பாஜகவும், திமுகவும் முயற்சித்து வந்தன. ஆனால், தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் விஜயகாந்த். இருந்தபோதும் எப்படியும் விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என பாஜக தொடர்ந்து முயற்சித்து வந்தது.

கேப்டன் அணி...
இந்நிலையில், இன்று மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்தப் புதிய அணிக்கு கேப்டன் அணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக அதிர்ச்சி...
தேமுதிகவின் இந்த முடிவு பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விஜயகாந்த் மாற்றம் எதையும் செய்ய இயலாது என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மாற்றம் வராது...
இந்த சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், "மக்கள் நலக் கூட்டணி-தே.மு.தி.க. கூட்டணியால் தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

மக்கள் நலனில் அக்கறையில்லை...
தி.மு.க., அ.தி.மு.க.வை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுளளது. இது மக்கள் நலனில் அக்கறை இல்லாத கூட்டணியே.

பாஜக கூட்டணி...
ஆனால், மிக வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம். எங்கள் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

வாழ்த்துக்கள்...
வெற்றிபெறாவிட்டாலும், முதலமைச்சராக வாய்ப்பே இல்லாவிட்டாலும், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

படையப்பா டயலாக்...
மேலும், இந்த புதிய கூட்டணி குறித்து கூறுகையில், ‘மாப்ள இவரு தான், ஆனா இவரு போட்ருக்க சட்டை என்னோடது' என்ற காமெடி தான் நினைவுக்கு வருவதாக' பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications