விஜயகாந்த்- பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு: மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சியில் சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக தேமுதிக, மதிமக ஒரு இடம்கூட பெறவில்லை.
இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

இப்படப்பிடிப்பில் விஜயகாந்த் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள வாழக்கொம்பு நாகூர் பகுதியில் ஒரு விடுதியில் விஜயகாந்த் தங்கியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி
அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. இதையடுத்து, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. இதற்காக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களை சந்தித்து மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.
நன்றி தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து வருகிறார்.
விஜயகாந்துடன் சந்திப்பு
சனிக்கிழமை இரவு 11 மணி பொள்ளாச்சி வந்த தமிழக பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி அருகே வாழைக்கொம்புநாகூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் விஜயகாந்தை சந்தித்தார்.
பதவியேற்பு விழா
அப்போது நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின் போது பிரேமலதா, தேமுதிக, பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications