ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் பொளேர்- வீடியோ
ஆர்கே.நகர் தேர்தலை எந்த காரணத்துக்காகவும் ரத்து செய்யக்கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்கே.நகர் தேர்தலை எந்த காரணத்துக்காகவும் ரத்து செய்யக்கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய அதிமுகவின் இரண்டு அணிகளும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பாஜக பணிமனையில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலை நிறுத்த அதிமுகவின் இரண்டு அணிகளும் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். எந்தக் காரணத்துக்காகவும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications