குக்கர் பொங்கலுக்கு பை சொல்லுங்க... ஆயுள் அதிகரிக்கும் மண்பானைக்கு மாறுங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil
  களைகட்டிய பானை உற்பத்தி,,பொங்கலோ பொங்கல்- வீடியோ

  சென்னை: மருத்துவ குணம் கொண்ட மண்பானையில் பொங்கல் வைத்து சாப்பிடுவதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பானைகள் செய்யும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. களிமண் சரிவரக் கிடைக்காததால் தொழில் நலிந்துள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  நெல்லை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவின் அனேக இடங்களில் செங்கோட்டையில் தயாராகும் பொங்கல் பானை்ககு நல்ல வரவேற்பு இன்றும் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தமிழர் திருநாள்

  தமிழர் திருநாள்

  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் உள்ள தமிழர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மண்பானைகளில் பொங்கல்வைத்து வழிபடுவது தமிழர் பண்பாடு. இப்படி மண்பாண்டங்களில் சமைத்து உண்டுவந்தால் ஆயுள் அதிகம் என்பது முன்னோர்களின் கருத்து.

  நலிவடையும் தொழில்

  நலிவடையும் தொழில்

  இப்போது பித்தளை, சில்வர் பாத்திரங்கள் மற்றும் எலக்ட்ரிக் குக்கர் என வந்துள்ளதால் மண் பாண்டங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 28 சதவிகிதமாக குறைந்துள்ளது. என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மண்பானைகளைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  நான்கு தலைமுறை

  நான்கு தலைமுறை

  தை மாதம் பிறக்கும் போது பொங்கல் வைத்து வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

  பொங்கல் பானை தயாரிக்கும் பணி நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை, கூனியூர் ஆகிய இடங்களில் நான்கு தலைமுறையாக பராம்பரியத் தொழிலாக செய்து வருகின்றனர்.

  மண்பானை பொங்கல்

  மண்பானை பொங்கல்

  இங்கு தயாரிக்கும் மண் பானைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இங்கு கிடைக்கும் மண் தரமானதாக இருக்கிறது.

  நெல்லை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவின் அனேக இடங்களில் செங்கோட்டையில் தயாராகும் பொங்கல் பானைககு நல்ல வரவேற்பு இன்றும் உள்ளது.

  தரமான மண்

  தரமான மண்

  நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஆற்றில் இருந்து எடுக்கப்படும் களி மண்ணை சாலை ஓரங்களில் காயவைத்து உலர்த்தி பின்பு தேவையான நீர் சேர்த்து குழப்பி அதிலிருந்து பானை தயார் செய்கின்றனர்.

  பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் இதில் ஈடுபடுகின்றனர்.

  குடும்பத்திற்கு வருமானம்

  குடும்பத்திற்கு வருமானம்

  மண் உலர்த்த, பானை தட்ட, பானையை அடுக்க பெண்ணும், பானை உலர்த்தி, அதை பக்குவமாக தீயில் சுட்டு எடுக்கும் பணியை ஆணுமாக செய்கின்றனர். பின்பு பானைக்கு சிவப்பு சாயம் பூசி காய வைக்கின்றனர்.

  பொங்கல் நேரங்களில் அதிக அளவில் விற்கப்படும் இந்த மண் பானைகளால் தங்களுக்கு ஒரளவு வருமானம் கிடைக்கும் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

  நகரங்களில் பொங்கல்

  நகரங்களில் பொங்கல்

  அதே நேரத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் மண் பானையில் பொங்கல் விடுவதில்லை என்றும், சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்களில் தற்போது பொங்கல் விடுவதால் தங்கள் தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

  தமிழர்களின் பாரம்பரியம்

  தமிழர்களின் பாரம்பரியம்

  அண்டை மாநிலமான கேரளாவில் மாதந்தோறும் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம் என்று தெரிவிக்கும் இவர்கள் அதிக அளவில் இங்கிருந்து பானைகள் கேரளாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

  தமிழர்களும் மீண்டும் மண் பானைகளில் பொங்கலிடும் பழக்கத்திற்கு மாறினால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

  ஆரோக்கியம்

  ஆரோக்கியம்

  மண் பானைகளில் சமைத்து சாப்பிட்டால் வியாதிகள் வராது என்றும், மண் பானை மருத்துவ குணமுடையது, அதனால்தான் இன்றளவும் நாட்டு மருந்து காய்ச்சுபவர்கள் மண் பானையிலேயே காய்ச்சுகின்றனர் என தெரிவித்தனர்.

  மண்பானையில் சமையல் செய்து சாப்பிடுவது நாவுக்கு ருசியாகவும், உடலுக்கு வலிமை நிறைந்ததாகவும் இருக்கும்.

  தமிழர்களும் மாறலாம்

  தமிழர்களும் மாறலாம்

  நோயற்ற வாழ்வுக்கு மண்பானை சமையல்தான் நல்லது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அதனால்தான் கேரள மக்கள் மண்பானையை விரும்பி பயன்படுத்துகிறார்கள்.

  பொங்கல் பண்டிகை காலக்கட்டங்களில் மட்டுமின்றி கோவில் திருவிழாக்களிலும் மண்பானைகளை பயன்படுத்தினால் இந்த தொழில் புரியும் மக்களின் வாழ்வு மலரும், அவர்கள் இல்லங்களிலும் அடுப்பெரியும் என்பது நிதர்சனமான உண்மை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Clay pot are ready in Tamil Nadu for Pongal festival. Mud pot preparation in Tirunelveli district is in full flow as Pongal festival

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற