திருவள்ளூரில் 9.65 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம்.. தனியார்கள் பட்டா பெற்றது எப்படி?
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே குருபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 9.65 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் சர்வே எண் 125ல் சுமார் 9.65 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தாசிகான், முனிகான், ஆகியோரின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் வருவாய்த் துறையினர் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய கிராம மக்கள் இன்று சர்ச்சைக்குரிய இடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இப்பகுதியில் காலங்காலமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட 9.65 ஏக்கர் தரிசு மேம்பாட்டு இடத்தினை தங்களுக்கு தெரியாமல் ஊர் பெயர் தெரியாத தனி நபர்கள் இருவருக்கு அரசு அதிகாரிகள் துணையுடன் போலியாக ஆவணங்கள் தயாரித்து பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் போலியாக வழங்கப்பட்ட இந்த பட்டாவை ரத்து செய்து இப்பகுதியில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் வகையில் சுடுகாடு அமைத்து தரவு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
'மேய்க்கால் புறம்போக்கு' நிலங்களை தனி நபர்கள் பட்டா போட முடியுமா?
பொதுவாக கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் கால்நடைகளுக்காக ஒதுக்கப்படும் 'மேய்க்கால் புறம்போக்கு' நிலங்கள், இன்று ரியல் எஸ்டேட் மாஃபியாக்களால் விழுங்கப்படுகிறது. சட்டப்படி 100% முடியாது, ஆனால் நடைமுறையில் முறைகேடுகள் மூலம் நடக்கிறது.
தமிழக அரசின் வருவாய்த்துறை விதிகளின்படியும் மேய்க்கால் புறம்போக்கு, மந்தவெளி, நீர்நிலை புறம்போக்கு போன்ற பொதுப் பயன்பாட்டு நிலங்களை வகைமாற்றம் செய்யவோ, தனிநபருக்குப் பட்டா வழங்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. ஆனாலும், சில கருப்பு ஆடு அரசு அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணங்கள் மூலம் பட்டாக்கள் அத்துமீறிப் போடப்படுகின்றன.
நிலத்தை எப்படி ஆக்கிரமிக்கிறார்கள்?
ஆக்கிரமிப்பாளர்கள் மிகவும் தந்திரமான சில வழிகளைக் கையாள்கிறார்கள். முதலில் கிராமக் கணக்குகளில் (A-Register) இருக்கும் 'மேய்க்கால்' என்ற பதிவை, கணினிமயமாக்கலின் போது (UDR அல்லது அதற்குப் பின்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து 'நத்தம் புறம்போக்கு' அல்லது 'குடியிருப்பு நிலம்' என்று தவறாக மாற்றுவார்கள். நத்தம் நிலமாக மாறிவிட்டால் எளிதாகப் பட்டா வாங்கிவிடலாம்.
அந்த நிலத்தில் தாங்கள் பல தலைமுறைகளாகக் குடியிருந்து வருவது போலவோ அல்லது விவசாயம் செய்து வருவது போலவோ போலியான அடங்கல் மற்றும் விஏஓ சான்றிதழ்களை உருவாக்குவார்கள். ஆரம்பத்தில் அந்த நிலத்தில் ஒரு சிறு கோவிலையோ அல்லது வேலியோ அமைப்பார்கள். யாரும் எதிர்க்கவில்லை என்றால், மெதுவாகத் தற்காலிகக் கொட்டகை அமைத்து, மின்சார இணைப்பு மற்றும் குடும்ப அட்டை வரை போலி முகவரியில் வாங்கி, அதை நீதிமன்றத்தில் 'ஆதாரமாக'க் காட்டி பட்டா கோரிவிடுவார்கள்.
இதனைத் தடுப்பது எப்படி?
இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும் பின்வரும் வழிகள் உள்ளன. முதலாவதாக, தமிழ்நாடு அரசின் eservices.tn.gov.in இணையதளத்திற்குச் சென்று, சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் 'அ-பதிவேடு' (A-Register) நகலை எடுக்க வேண்டும். அதில் 'மேய்க்கால் புறம்போக்கு' என்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிலத்தின் தற்போதைய போலிப் பட்டா மற்றும் ஆக்கிரமிப்புப் படங்களுடன் மாவட்ட ஆட்சியர் (Collector), வருவாய் கோட்டாட்சியர் (RDO) மற்றும் தாசில்தாருக்குப் பதிவுத் தபாலில் புகார் அனுப்ப வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், உயர் நீதிமன்றத்தில் 'பொதுநல வழக்கு' தொடரலாம். நீர்நிலைகள் மற்றும் மேய்க்கால் நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் நீதிமன்றங்கள் மிகக் கடுமையான அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றச் சொல்லும்.
அரசு செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்:
அனைத்து மேய்க்கால் நிலங்களையும் செயற்கைக்கோள் (GPS) மூலம் வரைபடம் தயாரித்து, ஆன்லைன் வருவாய்த்துறை மென்பொருளில் "இந்த எண்ணுக்கு பட்டா வழங்க முடியாது" என்ற 'டிஜிட்டல் பிளாக்' செய்ய வேண்டும். போலி ஆவணங்களுக்குத் துணை போகும் விஏஓ, தாசில்தார் மற்றும் ஆவணப் பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications