உயிருள்ள பாம்பை ஏன் ஒட்டகங்கள் விழுங்குகின்றன? அரபு நாடுகளின் வினோதப் பாரம்பரியத்தின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலைவனக் கப்பல் என்று பெருமையோடு அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, பாம்புகளை உயிருடன் வாயில் போட்டு விழுங்க வைக்கும் ஒரு விநோத வழக்கம் அரபு நாடுகளின் சில பகுதிகளில் இன்றும் இருக்கிறதாம்.. கேட்பதற்கே நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் பற்றின தகவல்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. உண்மையிலேயே இப்படியெல்லாம் நடக்குமா?

பொதுவாக ஒட்டகங்கள் ரொம்பவும் சாதுவானவை.,, கடினமான உழைப்பிற்குப் பெயர் போனவை.. இருந்தாலும் சில சமயங்களில் ஒட்டகங்களுக்கும் ஒரு விசித்திரமான பாதிப்பு ஏற்படுவதுண்டு.

camels swallow live snakes

"ஹயாம்" பாதிப்பு

இந்த பாதிப்புக்கு "ஹயாம்" என்று பெயர் சொல்கிறார்கள்.. இந்த நிலை ஏற்பட்டால், ஒட்டகங்கள் தங்களின் இயல்பை மொத்தமாகவே இழந்துவிடுமாம். அதாவது சாப்பாடு சாப்பிடாதாம், தண்ணீர் குடிக்காதாம்.. அனைத்தையும் அப்படியே நிறுத்திவிடுமாம்..

அதுமட்டுமல்ல, ஒட்டகத்தின் உடல் அப்படியே மரத்துப் போய், சுருங்கி, இறுக்கமடைய தொடங்கிவிடும். சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நாளுக்கு நாள் பலவீனமடையும் அந்த ஒட்டகம், நீண்ட நேரம் அசைவின்றி நிற்கும்.. கடைசியில் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவிடுமாம்.. ஒட்டகத்தை இந்த நிலைமையில் பார்த்தாலே பாலைவன மக்கள் நிலைகுலைந்து போய்விடுவார்களாம்.

ஒட்டகம் வளர்ப்பாளர்கள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மத்திய கிழக்கு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் வாழும் ஒட்டக வளர்ப்பாளர்கள், ஒரு பழங்கால விசித்திர மருத்துவ முறையைக் கையில் எடுக்கிறார்கள். அதாவது உயிருக்குப்போராடும் அந்த ஒட்டகத்தின் வாயை பலவந்தமாகத் திறந்து, உயிருடன் இருக்கும் ஒரு பாம்பை அதன் வாய்க்குள் திணித்து முழுங்க வைக்கிறார்கள்.

பாம்பு உள்ளே சென்றதும், அது ஒட்டகத்தின் தொண்டையில் சிக்கி கொள்ளாமல் நேரடியாக வயிற்றுக்குள் செல்வதை உறுதி செய்ய, ஒட்டகத்தின் வாயில் வாலியால் நிறைய தண்ணீரை அள்ளி ஊற்றிக் குடிக்க வைக்கிறார்கள்..

மலைப்பாம்பு - ஒட்டகம்

பாம்பை விழுங்கினால் ஒட்டகத்தின் உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி அது மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பும் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்களாம்..

பாம்பு ஒட்டகத்தின் வயிற்றுக்குள் போனதுமே, அநத் விஷம் ஒட்டகத்தின் உடம்பெல்லாம் பரவும். சில நாட்களுக்குப் பிறகு ஒட்டகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தொடங்குமாம். இதன்பிறகு ஒட்டகத்தின் தாகம் அதிகரித்து அது அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கும் என்றும், அதன் பிறகு ஒட்டகம் பழையபடி சுறுசுறுப்பாக மாறும்போது அது குணமடைந்துவிட்டதாகவும் அம்மக்கள் நம்புகிறார்கள். இந்த பழக்கம், பல தலைமுறைகளாகவே அந்தப் பகுதிகளில் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த பாரம்பரிய வைத்திய முறைக்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்கிறர்கள் நவீன கால்நடை மருத்துவர்களும், விஞ்ஞானிகளும்..

ஒட்டுண்ணிகள், பாக்டீரியா தொற்றுக்கள்

ஒட்டகங்களின் இதுபோன்ற நோய் அறிகுறிகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.. இது ஒட்டுண்ணிகள், பாக்டீரியா தொற்றுக்கள் அல்லது வேறு ஏதேனும் நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம். இதற்குத் தகுந்த நவீன மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர, இப்படி உயிருடன் பாம்புகளை விழுங்க வைப்பது ஒட்டகங்களின் உயிருக்கே பெரும் ஆபத்தாய் முடியும், ஒட்டகத்திற்கும் பாம்பிற்கும் தேவையற்ற வேதனையை ஏற்படுத்தும் இந்த செயல் ஏற்புடையதல்ல என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாரம்பரிய நம்பிக்கைக்கும் நவீன மருத்துவ அணுகுமுறைக்கும் இடையே எத்தனையோ முரண்பாடுகள் காலம் காலமாகவே இருந்து வருகின்றன.. அந்தவகையில் இந்த வைத்தியமும் அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை கிடையாது.. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத சிகிச்சையும்கூட.. எனினும் இந்த செய்திதான் தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வியப்பை கூட்டி வருகின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+