தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு போதை கலாசாரத்தை பரவவிட்ட திமுகதான் காரணம்- விஜய் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு என் மீது பழி போடுவதா? என திமுக, அதிமுகவை ஆவேசமாக முதல்வர் விஜய் விமர்சித்திருந்தார். திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல அங்கு சென்றிருந்த அவர் இவ்வாறு பேசினார்.

திருச்சி கிழக்கில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நிகழ்ந்தது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

vijay

இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேசினார். அவர் பேசுகையில், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியில் இந்த ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறோம்.

நிதி தொடர்பான எல்லா கதவுகளை திமுக அரசு லாக் செய்துவிட்டு போயிருக்கிறார்கள் (அதாவது கடன் வாங்கியது, கஜானா காலியை சொல்கிறார்,), அதை சரி செய்ய வேண்டாமா, ஒழுங்குப்படுத்த வேண்டாமா?

எனவே நான் மறுபடியும் சொல்றேன், இந்த விஜய் பொய் சொல்லி ஏமாற்றுவதற்காக அரசியலுக்கு வரவில்லை, உங்களுக்கு நல்லது செய்வதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. கவலையே படாதீங்கள்!

அடுத்தது இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை! ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் அது சரியில்லை, இது சரியில்லை என திமுகவும் மற்றும் பலரும் மாறி மாறி கூவுறீங்க! நான் ஒன்று கேட்கிறேன், இந்த மாடல் அரசு மாடல் அரசுனு சொல்றீங்களே, அதுல என்ன செய்து வைத்துவிட்டு போயிருக்கீங்க!

ஒரு ஊரு விடாம, ஒரு தெரு விடாம சட்டம் போதை பொருள் கலாச்சாரம் அப்படியே பரவி கொட்டி கிடக்குது! அதை ஆரம்ப கட்டத்திலேயே கன்ட்ரோல் செய்திருந்தால் இத்தனை பெண்கள், குழந்தைகளை இழக்கும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்குமா?

எல்லாத்தையும் பண்ணிட்டு பழியை தூக்கி என் மேல போடுறீங்க! நீங்கள் என்ன பழி போட்டாலும் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய செயலை இந்த விஜய் நிச்சயம் செய்வேன்.

அதற்காகத்தான் திறமையான காவல் துறை அதிகாரிகளை நியமித்துள்ளேன். பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை அடுத்த வாரம் தொடங்க போகிறோம்.

தவறு செய்தவர்கள் உடனே கைது செய்யப்படுகிறார்கள், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை உடனே தாக்கல் செய்யப்படும். நீதிமன்றத்திலும் தவறி செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதற்கான அத்தனை வேலைகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறோம். அதனால் நீங்கள் எந்த பழியை என் மீது போட்டாலும் உண்மையா, உறுதியா மக்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் இந்த விஜய் செய்து காட்டுவான் என முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.

விஜய் ஆட்சி பொறுப்பேற்று கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றச் சம்பவங்களும் சட்டம் ஒழுங்கும் பிரச்சினைகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் 25 பேர் கொலை செய்யப்பட்டனர். அதில் 4 இரட்டை கொலை சம்பவங்களில் 8 பேர் பலியாகிவிட்டனர். கந்து வட்டி கொடுமையால் ஒருவரும் காவல் துறை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இது மட்டுமின்றி 19 பாலியல் வன்கொடுமை. போக்சோ குற்றங்களும் 9 கொள்ளை, திருட்டுச் சம்பவங்களும் மது போதையால் ஏற்பட்ட 12 குற்றங்களும் 2 துப்பாக்கிச் சீடு, வெடிகுண்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் போதை பொருள் தாக்கத்தாலேயே நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+