பொங்கலுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகுமா?: காத்திருக்கும் தென் மாவட்ட பயணிகள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் சேவை பற்றிய அறிவிப்பு இல்லை. இதனால் சொந்த ஊர் செல்ல இருக்கும் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வருவர். இதனால் அரசு பஸ், ரயில் போன்றவற்றில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவும்.

பயணிகள் நலன் கருதி சிறப்பு பஸ்களும், சிறப்பு ரயில்களும் அந்தந்த துறை சார்பில் அறிவிக்கப்படும். இந்த நிலையில் சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்ய படாத பாடு பட்டு வருகின்றனர். ஏற்கனவே சென்னையிலிருந்து தென்மாவட்டத்துக்கான முன்பதிவு நவம்பர் 14ம் தேதியே புக் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

Pongal travel is waitlisted, no news from railway on special trains

எனவே சிறப்பு விட்டால் மட்டுமே அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி பொங்கல் கொண்டாடலாம் என்று தெரிகிறது.

சென்னையிலிருந்து நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு தீபாவளி, பொங்கல் காலங்களில் சிறப்பு ரயில் இயக்குவது குறைந்த அளவுதான் உண்டு.

2011 ஆண்டு சென்னையிலிருந்து செங்கோட்டை, தூத்துக்குடி, தலா 1 ரயில்தான் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே மாதிரி 2012ம் ஆண்டு நாகர்கோவிலுக்கு 2 ரயில் சேவைதான் இயக்கப்பட்டது. இதனால் வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் திகைப்பில் உள்ளனர்.

சாதாரண ரயில், வாராந்திர ரயில்களில் இடம் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் சிரமத்தைப் போக்கவும் பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயிலை இயக்க அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+